சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல்

சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல்
X
சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் விபத்து ஏற்படும் அபாயம் தொடர்ந்து அரசு பேருந்துகளும் நிறுத்துவதால் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தினம்தோறும் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் சுற்றுலா பயணிகளை கபரும் வகையில் பசுமையான புல்வெளிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களும் காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர் கொடைக்கானல் செல்வதற்கு காட்ரோடு டம் டம் பாறை வழியாக ஒரு சாலையும் பழனி வழியாக மற்றொரு சாலையும் உள்ளது இதில் காற்றோடு சாலை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் பேருந்து டிப்பர் லாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன இந்நிலையில் வாழ கிரி .ஊத்து உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை கட்டுப்பட்ட பகுதிகளிலும் டீக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன கொடைக்கானல் வரும் இரு முக்கிய சாலைகளிலும் ஆங்காங்கே தற்போது புதியதாக முளைத்துள்ள கடைகள் கடைகளைப் பார்த்தவுடன் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக வத்தலகுண்டு மலைச்சாலை வளைவு சாலையான ஊத்து அருகே உள்ள பகுதியில் கடந்த சில வருடங்களாக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இக்கடக்கி தினம்தோறும் அரசு பேருந்துகளும் பேருந்து பயணிகளுடன் நிறுத்தி டீ சாப்பிட்டு செல்கின்றனர் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கொடைக்கானலுக்கு வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதே போல் விபத்துகளும் ஏற்படுகின்றன பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் கூறிய நிலையில் கடைகளை எடுத்து போக்குவரத்தை சரி செய்கிறோம் என்று கூறி தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை அதேபோல் அருகில் உள்ள வனத்துறை அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதால் வளைவுச் சாலையில் தினம்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதே போல் கொடைக்கானல் வரை சாலைகளில் இருபுறமும் விபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் அதிக அளவு புதிது புதிதாக கடைகள் உருவாகிவிட்டன இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாமல் தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் குறுகலான சாலை வளைவு சாலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Next Story