கொடைக்கானல் பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டம்

கொடைக்கானல் பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டம்
X
கொடைக்கானல் கூக்கால் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வன விலங்குகள் உலா வருவது வழக்கமாக ஒன்றாகும். இந்த நிலையில் கொடைக்கானல் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மேல் மலை கிராமங்களில் உள்ள கூக்கால் ஏரியை கண்டு ரசித்து திரும்பிய நிலையில் சிறுத்தை ஒன்று சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் உள்ள புத்தரின் உள்ளே சென்றதை அப்பகுதியில் சென்ற சுற்றுலா பயணிகள் வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூக்கால் பகுதியில் வளர்ப்பு பிராணிகளை சில மர்ம விலங்குகள் வேட்டையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த நிலையில் மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அப்பகுதி கிராம மக்களும் அதிர்ச்சி உள்ளனர். எனவே வன துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனபகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் தற்போது எழுந்து வருகிறது.
Next Story