மலை கிராம பிரதான சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானை

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான தாண்டி குடி பண்ணைக்காடு குப்பம்மாள் பட்டி கே சி பட்டி மங்களம் கொம்பு மற்றும் ஆடலூர் பன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது அதேபோல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து தாக்குவதும் விவசாய நிலங்களை அழிப்பதும் பொதுமக்கள் செல்லும் பிரதான சாலைகளில் வருவதும் வழக்கமாகிவிட்டது தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவ்வப்போது யானைகளை அப்பகுதியில் இருந்து மட்டும் விரட்டுகின்றனர் ஆனால் நிரந்தரம் தீர்வு தற்போது வரை ஏற்படுத்தி தராதால் தாண்டி குடி அருகே உள்ள பள்ளத்து கால்வாய் பகுதியில் பிரதான சாலையில் ஒற்றை யானை வாகனத்திற்கு முன்பு நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை வந்தது தினம்தோறும் இப்பகுதியில் யானை சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் வனத்துறையினர் நிரந்தரமாக யானைகளை அடர்ந்த வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story

