சாலை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

சாலை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
X
தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டில் தொடர் விபத்துகள் – சாலை சீரமைப்பை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை
தூத்துக்குடி விவிடி சிலையிலிருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் அண்ணாநகர் 2வது தெரு மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை மேனுவல் பணி நடைபெற்றது. ஆனால் பணிகள் முடிந்தபின் சாலை முறையாக சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் தொடர்ச்சியான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம். எஸ். முத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலை சேதத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story