குமாரபாளையத்தில்மூதாட்டி இறப்பு

குமாரபாளையத்தில்மூதாட்டி இறப்பு
X
குமாரபாளையம் அருகே மூதாட்டி இறந்தார்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் முனியம்மாள், 67. இவரது கணவர் பெருமாள், 72. இவர் நேற்றுமுன்தினம் காலை ஆடு மேய்க்க சென்றவர், மாலை 01:30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது கட்டிலில் எவ்வித மூச்சு, பேச்சின்றி முனியம்மாள் இருந்தார். இவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கட்டிய போது, இவரை பரிசோதித்த டாக்டர், இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து முனியம்மாள் மகள் சாந்தாமணி, 48, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story