அரசு பள்ளிக்கு உதவிட வருகை தந்த டிவி. மற்றும் திரைப்பட நடிகர்

அரசு பள்ளிக்கு உதவிட  வருகை தந்த டிவி. மற்றும் திரைப்பட  நடிகர்
X
குமாரபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு உதவிட டி.வி. மற்றும் திரைப்பட நடிகர் வருகை தந்தார்.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளிக்கு டி.வி. மற்றும் திரைப்பட நடிகர் புகழ் வருகை தந்தார். தலைமை ஆசிரியை சுகந்தி வரவேற்றார். இவர் இந்த பள்ளியில் உள்ள கழிப்பிடம் மற்றும் மேடை பராமரிப்பு பணிகளை, தன் சொந்த செலவில் செய்வதாக கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த சமூக ஆர்வலர் சித்ராவை அனைவரும் பாராட்டினர். மாணவ, மாணவியர்களுக்கு நடிகர் புகழ் பரிசுகள் வழங்கினார். பள்ளி மற்றும் சித்ரா சார்பில் புகழுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் ஓடுவதை புகழ் பார்வையிட்டார். கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டார்.
Next Story