சாலை விபத்தில் ராணுவ வீரர் பலி

X
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரரான இந்திரஜித்குமார்( 30) என்பவர் விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று (அக்.25) அதே ஊரைச் சேர்ந்த ராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் பேரையூர்- - வத்ராப்பு சாலையில் எஸ்.கீழப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இந்திரஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

