கந்த சஷ்டி திருவிழா கூடுதல் தலைமை இயக்குனர் சந்தீப் மிட்டல் ஆய்வு.

கந்த சஷ்டி திருவிழா கூடுதல் தலைமை இயக்குனர் சந்தீப் மிட்டல் ஆய்வு.
X
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் திரு. சந்தீப் மிட்டல் இ.கா.ப அவர்கள் ஆய்வு.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வு நாளை 27.10.2025 நடைபெறவதை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் திரு. சந்தீப் மிட்டல் இ.கா.ப அவர்கள் இன்று (26.10.2025) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி, சிசிடிவி கேமராவின் கண்காணிப்பு திரை ஆகிய பகுதிகளுக்கு சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Next Story