நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்..

X
Rasipuram King 24x7 |26 Oct 2025 7:41 PM ISTநாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்..
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டு மக்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் பேசி வருகிறார். அதன்படி, மனதின் குரல் நிகழ்ச்சி இன்று 127-வது பகுதி ஒலி-ஒளிபரப்பானது. இதனை நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் பொதுமக்கள் பார்வையிட இராசிபுரம் வட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் Dr. K.P. இராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இன்றைய நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் குறிப்பிட்ட, தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சட் பூஜை கொண்டாட்டங்கள். சமூகத்தின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள பண்டிகைகள், சத்தீஸ்கட் மாநிலத்தில் நெகிழி குப்பை அகற்றும் உணவுக்கூடம், பெங்களூரு பகுதியில் குளங்கள், ஏரிகள், புத்துயிர் அளித்தல், அலையாத்தி காடுகளின் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பயன்கள், நமது சூழலோடு இணைந்து இருக்கும் நாட்டு நாய் இனங்கள், காவல் படைகளில் இந்திய இன நாய் இனங்களின் பயன்பாடு, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் நாட்டு நல செயல்பாடுகள், ஒடிசா மாநிலத்தில் கோரா புட் காபி சாகுபடி, சிக்மகளூர், கூர்க், ஹசன், பழனி, சேர்வராயன் மலை, நீலகிரி, அண்ணாமலைப் பகுதிகள், பிலிகிரி வயநாடு, திருவாங்கூர், மலபார் மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் காபி சாகுபடி குறித்து பிரதமர் கூறியதை பார்வையிட்டனர். 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வந்தே மாதரம் நவம்பர் 7-ம் தேதி 150-வது உற்சவத்தில் நுழைய உள்ளதையும், சமஸ்கிருதத்தின் தற்கால முன்னேற்றம், தேசத்தின் சுதந்திரத்திற்காக பகவான் பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடியின சமுதாய மக்கள் ஆற்றிய ஈடு இணையற்ற பணிகள், ஆகியவை குறித்தும் பிரதமர் கூறியதை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள், வட்டார பாஜக தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
