மினி மாரத்தான் போட்டியை மேயர் துவங்கி வைத்தார்.

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு TMB பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி நகர காவல்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து “போதைக்கு மாற்று விளையாட்டு” என்ற பெயரில் போதைக்கு எதிரான மினி மாரத்தான் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு மினி மராத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பொதுப்பிரவு ஆண்கள் மற்றும் பொதுப்பிரிவு பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றது ரூ.5000,3000,2000 என முதல் மூன்று இடங்களில் வருகிறவர்களுக்கும் 4 முதல் 10 இடங்களில் வருகிறவர்களுக்கு தலா ரூபாய் 500 ரொக்க பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் பிரிவில் ரா.சிதம்பர ராஜா முதலிடத்தையும் கா.அன்புச்செல்வன் இரண்டாமிடத்தையும் அ.மாரிச்செல்வம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர் பள்ளி மாணவிகள் பிரிவில் உ.மகாலட்சுமி முதலிடத்திடத்தையும் வே.அனு பிரியதர்ஷினி இரண்டாம் இடத்தையும் சு.நிவேதா மூன்றாம் இடத்தையும் பெற்றனர் அதேப்போல ஆண்கள் பொது பிரிவில் பே.கருத்த பாண்டி முதல் இடத்தையும் பெ.மனோஜ் குமார் இரண்டாம் இடத்தையும் சா.ரூபன் டேனியல் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர் பெண்கள் பொது பிரிவில் மு.ரம்யா முதலிடத்தையும் மு.ராதிகா இரண்டாம் இடத்தையும் மா.திவ்யமணி மூன்றாம் இடத்தையும் பெற்றனர் இந்நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பி.ஜாய்சன் அவர்கள் தலைமை தாங்கினார் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு மரு.மதன்IPS, TMB பவுண்டேஷன் நிர்வாக அலுவலர் திரு.ஜெயசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திரு அந்தோணி அதிஷ்டராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் டீ-ஷர்ட் வழங்கப்பட்டது இம்மாரத்தானில் ஆயிரம் பேர் பங்கேற்றனர் மாரத்தான் ஏற்பாடுகளை அறக்கட்டளையைச் சார்ந்த விக்னேஷ்,ஹரி பிரசாத், அசோக்,சந்தோஷ், பிரசன்னா, கௌதம், பிரான்சிஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story

