தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியத் தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு  ஒன்றியத் தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியத் தேர்தல் திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.பின்னர் நடந்த பொதுக்குழுவில்ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியத் தேர்தல் திருச்செங்கோடு மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது தேர்தல் அலுவலர்களாக மல்லசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.இரவி , எலச்சிபாளையம் ஒன்றியச் செயலாளர் சு.பேபி ஆகியோர் பொறுப்பேற்று தேர்தலை சிறப்பாக நடத்தினர். தேர்தலில் ஒன்றியத் தலைவராக வி.தாமரைச்செல்வன் ஒன்றியச் செயலாளராக க.சிவக்குமார் ஒன்றியப் பொருளாளராக ப.கோகிலா மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக ச.தேன்மொழி, ந.சுதா தி.சி. அமுதவள்ளி, இரா.கவிதாஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் தேர்தலுக்கு பிறகு தேர்வு செய்யப் பட்ட ஒன்றியத் தலைவர் வி.தாமரைச்செல்வன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியப் பொருளாளர் ப.கோகிலா வரவேற்புரை ஆற்றினார். மல்லசமுத்திரம் ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் ம.பெ.செந்தில்குமார் ,மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் ச.தேன்மொழி, ந.சுதா தி.சி. அமுதவள்ளி, இரா.கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் ஒன்றியச் செயலாளர் சி.கார்த்திக் , மாவட்டப் பொருளாளர் சு.பிரபு ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். ஒன்றியச் செயலாளர் க.சிவக்குமார் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் சிறப்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இயக்க உரை ஆற்றினார். இக் கூட்டத்தின் நிறைவில் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பெ.கௌதமி நன்றி கூறினார் கூட்டத்தில் 1. தேர்தல் கால வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும். 2..மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடல் வேண்டும் 3..பேரறிஞர் அண்ணா அவர்களின் காலம் முதல் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய‌ உயர்வுகளை தேர்தல் அறிக்கை உறுதிமொழியின் படி தொடர்ந்து வழங்கிடல் வேண்டும். 4..ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பினை பறித்து மாநில பணிமூப்பினை திணிக்கும் அரசாணை எண்:243 நாள் : 23.12.2023 முற்றாக இரத்து செய்யப்படுதல் வேண்டும். 5.கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வினை கைவிட்டு பணியாற்றும் ஆசிரியர்களை பாதுகாத்திடவும் , பணிமூப்பின் படி பதவி உயர்வு வழங்கிடவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 6.திருச்செங்கோடு ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மீது எழுப்பட்டுள்ள தவறான தணிக்கைக் தடைகளை கூட்டு இணையமர்வுக் கூட்டம் நடத்தி தீர்வு காணுதல் வேண்டும். 7. வட்டாரக் கல்வி அலுவலகப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவதை கைவிடல் வேண்டும்.8.தமிழ்நாட்டு ஆசிரியர் -அரசு ஊழியர்களின் வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள நவம்பர் 18 ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
Next Story