ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம்..

X
Rasipuram King 24x7 |26 Oct 2025 8:58 PM ISTஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம்..
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடை வீதியில் உள்ள "கொங்கு நாடு "ஜாகையில்" தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் க. தாளமுத்து தலைமை வகித்தார் . இந்த கூட்டத்தில் இணை செயலாளர் A. ராஜு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் R. நஞ்சப்பன் பொருளாளர் ஏ. குணசேகரன் இணைச் செயலாளர் ந. பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் க. தாளமுத்து தலைமை உரையில் போன வாரம் "அறந்தாங்கியில்" நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றதை விளக்கமாக எடுத்து கூறி பேசினார், இதில் ஓய்வூதியர் ஊழியர்களுக்கு3/: அகவலை படி உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 2. நம் ஓய்வூதியர்களுக்கு புகைப் படத்துடன் உடன் "ஓய்வூதியர் அடையாள அட்டை" பெற வழிவகை செய்தல் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் செயலாளர் க. சுப்பிரமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story
