ராசிபுரம் அருகே மதுபான கடை மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை பட்டாக்கத்தி ,மதுபான பாட்டிலால் தாக்கிய இளைஞர்களின் வீடியோ வைரல்..

ராசிபுரம் அருகே மதுபான கடை மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை பட்டாக்கத்தி ,மதுபான பாட்டிலால் தாக்கிய   இளைஞர்களின் வீடியோ வைரல்..
X
ராசிபுரம் அருகே மதுபான கடை மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை பட்டாக்கத்தி ,மதுபான பாட்டிலால் தாக்கி காவல்துறையின் பேரி கார்டுகளை அடித்து நொறுக்கிய இளைஞர்களின் வீடியோ வைரல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் சாலை அருகே உள்ள அரசு மதுபான கடையின் உள்ளே மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை இளைஞர்கள் 4 பேர் கொண்ட கும்பல் மதுபான கடைக்குள் இருந்த நபர்களை பாட்டிலால் தாக்கியும் பின்னர் அங்கிருந்து வெளிவந்த இளைஞர்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை பட்டா கத்தியால் தாக்கியும், தகாத வார்த்தையால் திட்டியும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பொதுமக்களை தாக்கியதில் 10க்கு மேற்பட்டோர் மண்டைய உடைந்த படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த பொதுமக்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் அங்குள்ள பொதுமக்கள் போதையில் இருந்த 4 இளைஞர்களை மீட்டு ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ரியாஸ்துன்(21), அஜ்புதீன் (20),பாபு(26),ஆகிய 3 இளைஞர்கள் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மது போதையில் இருந்தனரா அல்லது கஞ்சா போதையில் இருந்தனரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்கள் காவல்துறையினர் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை எட்டி உதைத்து அதன் மேல் நின்று குதிக்கும் காட்சிகளும், மேலும் அங்குள்ள இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற பொது மக்களை பட்டா கத்தியால் தாக்கி மண்டை உடைத்த சம்பவம் ராசிபுரத்தில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story