நர்சிங் மாணவி மாயம். தந்தை புகார்

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரிய கருப்பன் மகள் விஷ்வா (19) என்பவர் முத்துப்பாண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 23ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை . பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று மாலை எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story

