மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்

மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
X
மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (அக்.27) மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story