தமிழ்நாடு இந்தி மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது – சீமான் எச்சரிக்கை

X
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கரூர் துயரச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது: “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சார்ட்டட் விமானம் மூலம் அழைத்துச் சென்றது குறித்து நான் பேச விரும்பவில்லை; அது விஜய் அவர்களின் விருப்பம். ஆனால் அரசு இதனை அரசியல் நிகழ்வாக மாற்றுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசியல் படுகொலை; அதில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லையே?” என்றார். மேலும், “ஒரு நடிகரை பார்க்க வந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு வழங்குவது ஏன்? ஒன்றரை மாதமாக இதே விவாதம் நடக்கிறது. நான் ரசிகர்களை சந்தித்ததில்லை; என் கட்சியில் ரசிகர்கள் சேரவில்லை,” என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்தின் சார் திட்டம் குறித்து அவர் கூறியதாவது: “தொல்.திருமாவளவன் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி வடஇந்தியர்கள் குடியேறியுள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டால் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. கோவையில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகள் வடஇந்தியர்களின் வாக்குகள்தான்,” என்றும் சீமான் எச்சரித்தார்.
Next Story

