கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை !

X
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் 28 ஆம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் பதவியேற்ற பின் முதல் முறையாக கோயம்புத்தூருக்கு வருகிறார். இந்த வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 29 வரை கொடிசியா, ரெட் பீல்ட்ஸ், டவுன்ஹால், பேரூர், மருதமலை பகுதிகள் ‘சிவப்பு மண்டலம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலத்தில் ட்ரோன்கள் பறக்க விடுதல் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கோவை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு துணைத் தலைவர் திருப்பூர் செல்கிறார்.
Next Story

