கோவை: குட்டியுடன் உலாவும் காட்டு யானை !

X
கோவை மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் தென்படும் நிலை தொடர்கிறது. நேற்று மாலை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள பொன்னுது அம்மன் கோவில் அடிவாரத்தில் குட்டியுடன் தாய் யானை உலா வந்தது. இதை அப்பகுதி மக்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். முன்னதாக தொண்டாமுத்தூர் மற்றும் தடாகம் பகுதிகளில் ரோலக்ஸ், வேட்டையன் எனப்படும் ஒற்றைக் காட்டு யானைகள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. தற்போது புதிய யானை தோன்றியதால் அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

