திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல்லுக்கு புதிய வழித்தடத்தில் தாழ் தள பேருந்து இயக்கம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு முதல் நாமக்கல் வரை புதிய வழித்தடத்தில் தாழ்த்தளபேருந்து சேவை துவக்கம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருக்கு ஈஸ்வரன் நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கொடியசைத்துதுவக்கி வைத்தனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் வரை புதிய வழித்தடத்தில் தாழ் தள பேருந்து துவக்க விழா புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பயன் பெறும் இயக்கப் படும் இந்த பேருந்து சேவையை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளருமான ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிஉறுப்பினர் மாதேஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் குடியரசு துவக்கி வைத்தனர். குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிற்கும் வகையில் எல் எஸ் எஸ் பேருந்து ஆக பயணப்படுகின்ற பேருந்துபின்பக்க இயந்திரம்மூலம் இயக்கப்படும் பேருந்தாகும். தானியங்கி கதவுகள் மற்றும் சாய்தளமாக வளைந்து கொடுக்கக் கூடிய வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்க வசதியாகமுன் பக்கத்தில் இருக்கைகள் சாதாரணமானவர்கள் அமர பின்பக்கத்தில் உயரமான இருக்கைகள் என பல வசதிகளுடன் இந்த பேருந்து அமைக்கப் பட்டுள்ளது.பேருந்து சேவை துவக்க விழா நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில், திமுக நகர மன்ற துணைத் தலைவர் கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவணன முருகன், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், சண்முக வடிவு பாபு, திவ்யா வெங்கடேஸ்வரன்,சினேகா ஹரிகரன், ராஜா, சுரேஷ்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வடக்கு நகர செயலாளர் குமார், தெற்கு நகர செயலாளர் அசோக்குமார், தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தெய்வம் சக்தி, தீரன் சின்னமலை, தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கொங்கு கோமகன், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி, மாவட்ட தொழிற்சங்க ஒருங்கிணைப் பாளர் குரு இளங்கோ, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சிபி செல்வராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளர் வெற்றி செந்தில்உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story