கரூரில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை, ஒருவார காலமாகியும் கிடைக்காததால் சிறுவனின் அத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கரூரில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை, ஒருவார காலமாகியும் கிடைக்காததால் சிறுவனின் அத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் வசிப்பவர் நாகலட்சுமி. இவர் சேலத்தில் உள்ள தனது சகோதரின் மகன் கார்த்திகேயன் (வயது 13) என்ற சிறுவனை அழைத்து வந்து தன் வீட்டில் தங்க வைத்து வாங்கல் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று திரும்பிய அச்சிறுவன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1,500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவன் கார்த்திகேயன் பள்ளியில் தனது நண்பர்களிடம் பள்ளிக்கு வர பிடிக்கவில்லை என்றும், 4 பாடத்தில் தேர்ச்சி பெறாததால் எங்காவது போய் விடலாம் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த அச்சிறுவன் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றது மட்டும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தனது சகோதரர் மகனை கண்டு பிடித்து தர உதவி செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அவருடைய அத்தை மனு அளித்துள்ளார்.
Next Story




