தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினர் மீட்பு பணியில் தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மேலாண்மை ஒத்திகை மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில், மழைக்காலங்களில் சாலையின் குறுக்கே விழும் மரங்கள், இடிந்து விழும் சுவர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, தீயணைப்புத்துறையினரின், 50க்கும் மேற்பட்ட தளவாட பொருட்கள் கொண்டு மீட்பு ஒத்திகை நடைபெற்றது. மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மீட்டெடுக்க வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு மிதவை தயாரித்தல் ஆகியவை செயல்முறையாக செய்து காண்பிக்கப்பட்டன. டெமாலிஸர், பவர் டிரில்லர், மர அறுவை இயந்திரம், அவசரகால மீட்பு வாகனம் ஆகியவை மூலம் தீயணைப்பு குழுவினர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வருவாய்த் துறையினர் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்நது.
Next Story