அரசு கல்லூரியில் நீயா நீயா? நானா?

அரசு கல்லூரியில் நீயா நீயா? நானா?
X
குமாரபாளையம்அரசு கல்லூரியில் நீயா நீயா? நானா? பாணியில் விவாத
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் கலை திருவிழா நிறைவு விழா நடைபெற்றது. விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சிந்தனைப் பேரவை சார்பில் மது போதை பாதிப்பு அதிகமா? கைப்பேசி போதை பாதிப்பு அதிகமா? என்ற தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் எழுத்தாளர் இரமேஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், வணிகர்கள், தனியார் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்து சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அருணாசலம் வரவேற்புரை ஆற்ற, துணைப் பேராசிரியை திருமதி சாய் லீலா அவர்கள் நன்றி கூறினார்.
Next Story