நாசரேத் திருமண்டலம் சார்பாக ஒரு லட்சம் பனை விதை விதைக்கும் திட்டம்!

X
தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் தமிழகத்தில் 6 கோடி பனை விதை விதைக்கும் திட்டத்தின் சார்பாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தூத்துக்குடி மாவட்டத்தை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. 500-க்கு மேற்பட்ட ஆலயங்கள் உள்ளது. சுற்றுச்சூழல் கரிசனை துறையின் சார்பாக திருச்சபை மக்களை ஒருங்கிணைத்து நவம்பர் மாதம் இறுதிக்குள்ளாக ஒரு லட்சம் பனை விதைகளை திருமண்டல எல்கைக்குள்ளாக விதைக்கும் திட்டத்தினை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மாடரைட்டர் கமிஷனரி பேராயர் ஐசக் வரப்பிரசாத் தொடங்கி வைத்தார். திருமண்டல நிர்வாக செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மேலாளர் பிரேம்குமார் ராஜா ராஜா சிங் நாசரேத் பேராலய குருவானவர் ஹென்றி கவுன்சில் கவுன்சில் சேர்மன் டேவிட் ராஜ், வெல்டன் ஜோசப், ஜெபக்குமார் ஜாலி, பேராயர் சாப்ளின் பாஸ்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இயக்குனர் ஜான் சாமுவேல் பேசுகையில் முதலமைச்சர் அவர்கள் எடுத்து இருக்கின்ற இந்த முயற்சிக்கு கை கொடுக்கும் வண்ணமாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் மூலமாக மாபெரும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் ஆலயங்களின் சார்பாக எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.
Next Story

