திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை .
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் சஷ்டி விரதத்தில் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலை இன்று (அக்.27) மாலை சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அருகே சுப்பிரமணிய சுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளினார்கள். மேலரத வீதி, கீழ ரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Next Story




