காங்கேயம் அருகே முதலாளியை அடித்துக் கொன்ற கூலித் தொழிலளி

X
காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் குட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (55) விவசாயம் செய்து கொண்டு காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வந்தார். இவரும் இவரது தாய் கஸ்தூரி(78) இருவரும் முத்தூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தினமும் குட்டப்பாளையம் வந்து விவசாயத்தையும் கவனித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக சிவக்குமார் மனைவி தனியாக குடியிருந்து வருகிறார். சிவகுமார் தோட்டத்தில் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த கௌதம்,34, என்பவர் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். மாலை 5 மணிக்கு சிவக்குமார் தனது தோட்டதுக்கு காரில் வந்துள்ளார். அப்போது கௌதம் குடிபோதையில் இருந்துள்ளான் அது குறித்து சிவக்குமார் கேட்கவே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கௌதம் அருகில் இருந்த மரக்கட்டையால் சிவக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிவக்குமார் மயக்கமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் கல்தூரியை அடிக்க முற்பட்டபோது, அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாலிட்டுக்கொண்டார். பைக்கை எடுத்துக் கொண்டு கௌதம் தலைமறைவாகியுள்ளார்.தகவலறிந்து காங்கேயம் ஏஎஸ்பி அர்பிதா ராஜ்புட் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது பற்றி காங்கேயம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான கௌதமை தேடி வருகின்றனர். கௌதம் நடவடிக்கை சரியில்லாததால், தனது தோட்டத்தில் இருந்து வெளியேறுமாறு சிவக்குமார் கூறியதாகவும் ஆனால் கௌதம் வெளியேற தாமதித்தால் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த கொலை நடைபெற்றதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர். மேலும் ராஜா என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து குற்றவாளி சென்ற வழித்தடத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று பின்னர் திரும்பி வந்தது.
Next Story

