காவலர்களின் துரித பணி. பொதுமக்கள் பாராட்டு.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விழாவின் சூரசம்கார நாளான நேற்று (அக்.27) இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இறைவனை தரிசிக்க திருப்பரங்குன்றம் வருகை புரிந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிலின் உட்பிரகாரத்தில், மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த பாப்பா என்ற மூதாட்டி தவறுதலாக அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்ட காரணத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனே அவரது மகள் அப்பகுதியில் பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதனைக் கேட்டறிந்த மாநகர காவல் ஆணையர் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் உதவி ஆணையர்,காவல் ஆய்வாளர் மற்றும் அதிரடிப்படை காவலர்கள் விரைந்து செயல்பட்டு, கடும் கூட்ட நெரிசலிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவியுள்ளனர். காவல் ஆணையர் மற்றும் மாநகர காவல் துறையினரின் இச்செயலுக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்ததுடன் வெகுவாக பாராட்டினார்கள்.
Next Story




