கோவை: காற்றாலை தீ விபத்து - பராமரிப்பு குறைபாடு !

சூலூர் அருகே காற்றாலை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் நேற்று பலத்த காற்றின் காரணமாக ஒரு காற்றாலை இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். போதிய பராமரிப்பு இல்லாததால், காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் காற்றாலைகள் அடிக்கடி தீப்பிடிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story