மருதமலை: சாலையில் குட்டிகளுடன் வந்த காட்டு யானை !
கோவை மருதமலை சாலையில் நேற்று அதிகாலை மூன்று குட்டிகளுடன் மூன்று காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து சாலையில் நடந்து வந்தன. இதைக் கண்ட பக்தர்கள் ரோட்ல வராங்க சாமி, நம்ம ஜாக்கிரதையா இருந்துக்கணும் என்று கூச்சலிட்டதால், யானைகள் விரைவாக வனப்பகுதியை நோக்கிச் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் ரோலக்ஸ் என அழைக்கப்பட்ட காட்டு யானை மூவர் உயிரிழப்புக்கு காரணமானதைத் தொடர்ந்து வனத்துறையினர் அதனைப் பிடித்து டாப்ஸ்லிப் முகாமிற்கு அனுப்பியிருந்தனர். சூரசம்ஹார விழாவை முன்னிட்டு வனத்துறை கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
Next Story



