கரூர்- குடிமனை, குடிமனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
கரூர்- குடிமனை, குடிமனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்சார்பில் பட்டா கேட்டு மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கரூர் மாவட்ட குழு சார்பில் மாநில துணைத்தலைவர் வசந்தாமணி தலைமையில் குடிமனை,குடிமனை பட்டா,அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பெருமாள் மாவட்டத் தலைவர் கந்தசாமி மாவட்ட செயலாளர்கள் சக்திவேல் ராஜு ஜோதி பாசு மாநகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர், கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அரசு தரிசு நிலங்களில் வீடு கட்டி பட்டா இல்லாமல் குடியிருந்து வருகிற பல லட்சக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், 1963 இனாம் ஒழிப்பு மற்றும் மயிலா ராயத்துவாரி மாறுதல் சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து நேரடியாக உழவடை செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும் எனவும், மாநில முழுவதும் வழங்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளவற்றை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு ஒப்படைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
Next Story






