நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக் குழு கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு விழா
Tiruchengode King 24x7 |28 Oct 2025 5:34 PM ISTகொங்கு நாட்டில் இருந்து மலேசியாவுக்கு வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களாக சென்ற மண்ணின் மக்கள் வாழ்க்கை வரலாறை சொல்லும் மலேசியாவைச் சேர்ந்த ராம. ஜெயபாலன் என்பவரால் எழுதப்பட்ட இழையோடும் நினைவுகள்நூல் வெளியீட்டு விழா திருச்செங்கோடு கே ஆர் மகாலில் நடைபெற்றது
கொங்கு நாட்டில் இருந்து மலேசியாவுக்கு வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர் களாக சென்ற கொங்குநாட்டு மண்ணின் மக்கள் வாழ்க்கை வரலாறை சொல்லும் வகையில் மலேசியாவைச் சேர்ந்த ராம ஜெயபாலன் என்பவரால் எழுதப்பட்ட இழையோடும் நினைவுகள்நூல் வெளியீட்டு விழா திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நூலை வெளியிட கட்சியின் பொருளாளர் கலைமாமணி கேகே.சி.பாலு பெற்றுக் கொண்டார் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள கே.ஆர். மஹாலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மலேசியாவை சேர்ந்த ராம ஜெயபாலன் என்பவர் கொங்கு நாட்டில் இருந்து வெள்ளையர் ஆட்சி காலத்தில் கூலித் தொழிலாளர்களாக அடிமைகளாக ரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் குறித்தும் அதே மண்ணில் இன்று கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்கள் நல்ல வகையில் படித்து,நல்ல வேலையில் உள்ள நிலையையும் எடுத்துக் கூறும் வகையில் இழையோடும் நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும்திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் நூலை வெளியிட கட்சியின் பொருளாளர் கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் கலைமாமணி K.K.C. பாலுபெற்றுக் கொண்டார்.நூலை வெளியிட்டு பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது இன்றைய காலகட்டத்தில் படித்துவிட்டு இளைஞர்கள் வெளிநாடுகளில் விரும்பி வேலைக்கு செல்கிறார்கள். ஆனால்வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் கட்டாயப்படுத்தியும்,வறுமை காரணமாகவும்,அன்றைக்கு பினாங்கு என அழைக்கப்பட்டு இன்றைக்கு மலேசியா என கூறப்படும் நாட்டில் கூலிகளாக ஏன் அடிமைகளாக வேலைக்குச் சென்ற கொங்கு நாட்டின் மக்கள் குறித்தநூலை மலேசியாவைச் சேர்ந்த ஜெயபாலன் எழுதியுள்ளார் நாமக்கல் தாலுகா மக்கள் நல சங்கம் என மலேசியாவில் இருந்த ஒரு சங்கத்தின் நிகழ்விற்கு மலேசிய பிரதமரை அழைத்த போது ஜாதி சங்கம் என நம்மைச் சேர்ந்த சிலரே தெரிவித்ததால் மலேசிய பிரதமர் விழாவுக்கு வர மறுத்த நிலையில் அவரை சென்று சந்தித்து கொங்கு நாடு என்பது தமிழ்நாட்டின் ஒருபகுதி என்பதை எடுத்துக் கூறிசங்கத்தின் பெயரை கொங்கு மக்கள் சங்கம் என மாற்றி அமைத்தோம் அன்றிலிருந்து தான் நமக்கு தொடர்ந்து கொங்கு என பெயர் வரத் தொடங்கியது. உழைக்கும் மக்கள் கொங்கு நாட்டு மக்கள் என்பது வெள்ளைக் காரனுக்கு தெரிந்திருக்கிறது அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்துக்காரர் என்பதும் தெரிந்திருக்கிறது அதனால் தான் இன்றும் அதிகப்படியான உழைப்பாளிகள் மலேசியாவில் நமது சொந்தங்கள் இருந்து வருகின்றனர் என கூறினார்.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருச்செங்கோடு மேற்கு ஒன்றிய பொருளாளர் துர்கா ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.மாநில பொருளாளர் கலைமாமணி கே கே சி பாலு மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தெற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளிபாளையம் நகரச் செயலாளர் வெங்கடேசன்தீர்மானங்களை வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில்தீரன் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர் பொன்னுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பூங்கொடி, மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேந்திரன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வெற்றி செந்தில்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தெய்வம் சக்தி, திருச்செங்கோடு வடக்கு நகர செயலாளர் சேன்யோ குமார், தெற்கு நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் அசோக்குமார் மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ராஜேந்திரன் நகர மகளிர் அணி செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் சம்பூர்ணம்ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள்,மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் தொழிற்சங்க நிர்வாகிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


