முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் சிறப்பு வழிபாடுகள்
Komarapalayam King 24x7 |28 Oct 2025 6:22 PM ISTகுமாரபாளையம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் மற்றும் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கந்தசஷ்டி நாளையொட்டி குமாரபாளையம் தேவாங்கர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று அரோகரா கோஷமிட்டு சுவாமியை வணங்கினர். திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அரோகரா என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் வலம் வந்தனர். இதே போல் வட்டமலை முருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் முருகன் கோயில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story


