தேர்தல் நடந்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம்

X
Komarapalayam King 24x7 |28 Oct 2025 6:28 PM ISTகுமாரபாளையத்தில் தேர்தல் நடந்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம் நடந்தது.
குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடந்தும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம் நடந்தது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஒட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், பூத் ஏஜென்ட்களுக்கு உரிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. வாக்காளர்கள் இறப்பு குறித்தும், விலாசம் மாற்றம் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தாசில்தார் மற்றும் உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் பிரகாஷ், துணை தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
