ஓசூர் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொல்ல குப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (34) இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது டூவீலரில் ஓசூர் பேரண்டப்பள்ளி புதிய மேம்பால கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

