லாரி ஓட்டுனர் மீது டூவீலர் மோதியதில் லாரி ஓட்டுனர் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |28 Oct 2025 6:31 PM ISTகுமாரபாளையத்தில் லாரி ஓட்டுனர் மீது டூவீலர் மோதியதில் லாரி ஓட்டுனர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே ரங்கனூரை சேர்ந்தவர் பழனியப்பன், 62. லாரி ஓட்டுனர். இவர் தனது லாரியை சேலம், கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் பேக்கரி ஒன்றில் நிறுத்தி விட்டு, டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஹீரோ ஸ்ப்லேண்டர் வாகன ஓட்டுனர், இவர் மீது மோதியதில், பழனியப்பன் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டூவீலர் ஓட்டுனர் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் கதிர்வேல், என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
