கரூர் -மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
கரூர் -மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். ஈரோடு மாவட்டத்தில் 16.10.2025 அன்று இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் 19 வயதிற்குட்பட்ட மல்யுத்தம் (WRESTLING) மாநில அளவில் நடைபெற்ற தேர்வு போட்டியில் கரூரை சேர்ந்த ஹரிணி, கார்த்திகா ஆகியோர் தேர்வு பெற்று, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் கரூர் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story



