பிளெக்ஸ்.இல் பிரேம் அகற்றாமல், பிளெக்ஸ் மட்டும் அகற்றுவதால் விபத்து அபாயம்

X
Komarapalayam King 24x7 |28 Oct 2025 8:24 PM ISTகுமாரபாளையத்தில் பிளெக்ஸ்.இல் பிரேம் அகற்றாமல், பிளெக்ஸ் மட்டும் அகற்றுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே பல பிளெக்ஸ் போர்டுகள வைக்கப்பட்டுள்ளன. பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, போலீஸ் ஸ்டேஷன் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, கவுரி தியேட்டர் பிரிவு, கே.ஓ.என். தியேட்டர் பிரிவு, காவேரி நகர் உள்பட பல இடங்களில் ஒவ்வொரு பிளெக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பிளெக்ஸ் போர்டுகள் வைக்க இடம் பிடித்து மூங்கில்களை கட்டி வைத்துள்ளனர். இதில் மர பிரேம்களை கட்டி வைத்து உள்ளனர். வைக்கப்பட்ட பிளெக்ஸ்களை பிரேமுடன் அகற்றாமல், பிளெக்ஸ் மட்டும் சிலர் அகற்றி வருகின்றனர். இதனால் சாலையோரமாக இருக்கும் பிரேம்கள், சாலைகளில் வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களின் கண்களுக்கு தெரிவது இல்லை. இதனால் இதில் மோதி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஆகவே, குறிப்பிட்ட நாட்கள் கழித்து, பிளெக்ஸ் உடன் பிரேம்களையும் அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
