குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் முறையாக விசாரணை செய்யாமல் விவசாயி சொத்து ஆவணத்தை ரத்து செய்த வருவாய் துறை

X
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் இந்நிலையில் கருப்பையாவின் குடும்ப சொத்துக்களை அவரின் தந்தை முத்துக்கருப்பன் பெயரில் பராமரித்து வந்த நிலையில் முத்து கருப்பன் தனது சொத்தை தனது இரண்டு மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார் பின்னர் தந்தை முத்துக்கருப்பன் மற்றும் சகோதரர் ஜெயபால் உட்பட குடும்பத்தினருடன் கருப்பையாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் குடும்ப சண்டை ஆக மாறி உள்ளது இந்த நிலையில் வயதான காலத்தில் தன்னை பராமரிக்கவில்லை என பொய் புகார் தெரிவித்து மாவட்ட வருவாய் துறை சார்பில் கருப்பையாவிற்கு எழுதிக் கொடுத்த சொத்தினை ரத்து செய்துள்ளதாகவும் இதை மேல் முறையீடு செய்து கருப்பையா கோரிக்கை வைத்த நிலையில் இருதரப்பையும் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டது இதில் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கருப்பையா தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்தார் எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி கருப்பையாவிற்கு சொந்தமான சொத்தினை மீண்டும் பெற்று தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்
Next Story

