ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்த குற்றவாளியை தப்பிக்க விட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்த குற்றவாளியை தப்பிக்க விட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞரும், வழக்கறிஞர்கள் சங்க பொருளாருமான சதீஷ்குமார் இவர் கோட்டைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. முத்துகிருஷ்ணன் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துகிருஷ்ணன் சதீஷ்குமார் அவரது குடும்பத்தினர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கடந்த 25 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் முத்துகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் உடல் தகுதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் மருத்துவர் பரிசோதித்த போது முறையற்ற செயல்களில் நடந்ததாகவும் கூறப்படுகிறது இதனால் மருத்துவர் முத்துகிருஷ்ணனை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடல் தகுதி எடுக்க அனுப்பி வைத்த நிலையில் முத்துகிருஷ்ணனை காவல்துறையினர் தப்பிக்க வைத்ததாக குற்றம்சாட்டியும் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர், காவல்துணைக் கண்காணிப்பாளரை கண்டித்தும்இருவரையும் பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி முத்துகிருஷ்ணனை உடனடியாக கைது செய்ய வில்லை என்றால் இன்று நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா முத்துக்கிருஷ்ணனை உறுதியாக கைது செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் நேற்று கலைந்து சென்றனர். இந்நிலையில் இதுவரை முத்துகிருஷ்ணனை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் குற்றவாளிக்கு துணை போகும் காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பிய மாவட்ட வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு இன்று நகர் காவல் நிலையம் அருகே உள்ள கொல்லம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story

