அன்றாடம் பணிக்கு அல்லது வெளியூர் செல்லும் மக்களால் இ-படிவத்தை நிரப்ப முடியாது-விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி*

X
மழைக்காலத்தில் விவசாய பணிகள் தொடங்கும் நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தேவையற்றது;அன்றாடம் பணிக்கு அல்லது வெளியூர் செல்லும் மக்களால் இ-படிவத்தை நிரப்ப முடியாது-விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி விருதுநகரில் உள்ள இந்திய அரசு நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,21 ஆயிரத்து 284 மெட்ரிக் டன் அளவு கொண்ட இந்த சேமிப்பு கிடங்கு கடந்த 2022 முதல் முழு கொள்ளளவுடன் நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை வரவேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது ஏன் எதிர்க்கிறார்?என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகளால் ஒரு குறிப்பிட்ட வாக்காளரின் பெயரை இல்லாமல் செய்யலாம் என்றும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியிடப்படும் அதில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்படும் அதனால் யாருக்கும் பாதிப்பில்லை,ஆனால் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் வாக்காளர்களாகி அனைவரும் மீண்டும் இ - படிவத்தை நிரப்பி அதில் கொடுக்கப்பட்டுள்ள உறுதி மொழியில் கையொப்பம் இட வேண்டும் என்றும் யாரெல்லாம் ஈ- படிவம் கொடுக்கவில்லையோ அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என்றார்.இதனால் தினமும் வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் விவசாய பெருமக்கள் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் தான் பாதிக்கப்படுவர்.காரணம் வேலைபளு.பி.எல்.ஓ விடம் எத்தனை முறை இவர்களால் அழைய முடியும்.கேட்பதில் ஏதாவது ஒரு ஆவணத்தை விட்டுவிட்டால் பட்டியலில் இடம் பெற முடியாது என்றும் நிலைமை இப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஆதரவு அளிப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார் மழைக்காலத்தில் விவசாய பணிகள் தொடங்கும் நேரத்தில் இந்த அவசரம் தேவையா? என கேள்வி எழுப்பிய அவர் அமித்ஷா சொல்வதை அப்படியே கேட்டு ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,வாசன் போன்றோர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் ஆறு கோடியே 80 லட்சம் வாக்காளர்களில் குறைந்த பட்சம் 30 லட்சம் வாக்காளர்களாவது விடுபட்டு போவார்கள் அவர்கள் 2026 வாக்குச்சாவடிக்கு செல்லும் போதுதான் தனக்கு வாக்கு இல்லை என்பது தெரியவரும் என்றார்.
Next Story

