ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ...*

ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன  ஆர்ப்பாட்டம் ...*
X
ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ...*
விருதுநகரில் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக மாநிலத்துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணி புரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்கி பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் ஊராட்சி மூலம் ஊதியம் வழங்குவதோடு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000, பணிக்கொடை ரூ.ஒரு லட்சம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேட்டி: கே.பி.எஸ்.கண்ணன் - மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் (விருதுநகர்)
Next Story