நிலையூர் - கம்பிக்குடி கால்வாயில் வைகை உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்தனர்

X
காரியாபட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில், நிலையூர் - கம்பிக்குடி கால்வாயில் வைகை உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் அதிமுகவினர் மனு அளித்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மாங்குளம், ஆவியூர், குரண்டி, அரசகுளம், கம்பிக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் கண்மாய்ப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ளன. இந்த நிலையில் தற்போது வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் வைகை அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வைகை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரை நிலையூர் - கம்பிக்குடி பாசன கால்வாயில் காரியாபட்டி விவசாய பெருமக்களின் நலன் கருதி உடனடியாக கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே.முருகன் தலைமையில் காரியாபட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொறியாளர்களிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசாமி, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வேங்கை மார்பன், காரியாபட்டி நகர் கழகச் செயலாளர் விஜயன் மற்றும் பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

