பயணியிடம் கைப்பயை திருடிய பெண் கைது.

பயணியிடம் கைப்பயை திருடிய பெண் கைது.
X
பரமத்தி வேலூரில் பேருந்து பயணியிடம் கைப்பயை திருடிய மதுரையைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
பரமத்தி வேலூர் அக்.29: பரமத்தி வேலூர் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி (40). இவர் பரமத்தி வேலூர் செல்வதற்காக ஜேடர்பாளையத்தில் பேருந்தில் ஏறி சென்றார். வேலூர் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது, பையில் கைப்பேசி மற்றும் ரூ. 3,200 வைத்திருந்த கைப்பை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், வேலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து வேலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் மதுரை வண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (40), அவரது மனைவி மல்லிகா (எ) விமலா (36) என்பதும், பேருந்தில் ராசாத்தியின் கைப்பையை திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து, விமலாவை கைது கைது செய்து விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
Next Story