காங்கேயம் அருகே முத்தூரில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் 

காங்கேயம் அருகே முத்தூரில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் 
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள முத்த்தூர் பகுதியில் உள்ள கோவில்களில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காங்கேயம் அடுத்துள்ள முத்தூரில் இன்று செல்லாண்டியம்மன் கோவில், செல்வகுமாரசாமி கோவில் மற்றும் அத்தாத்தா முத்தாத குகைக் கோவில்,குப்பண்ணசாமி கோவில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கானசாலையில் காத்திருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்திகளை சந்தித்தார் அப்போது வெளிநாடு சென்றுவிட்டு தமிழகம் சுற்றுப்பயணமாக 3 நாள் வந்திருப்பதாகவும் இதற்கு முன்னதாக சீசல் நாட்டிற்கு சென்று விட்டு கோவை வந்து அடைந்ததாகவும் இன்று இரண்டாவது நாளாக முத்தூரில் உள்ள கோவில்களில்  சாமி தரிசனம் செய்வதற்கு வந்திருப்பதாகவும் என்னுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த பயணத்தில் கலந்துள்ளார் என்றும். என்னுடைய குலதெய்வ கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.பின்னர் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
Next Story