வங்கி நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை

X
குமரி மாவட்டம் செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து ரூ. 10 லட்சம் கடன் வாங்கினார். சில தவணைகளை சரியான தேதியில் செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் நடராஜன் வீட்டு சுவரில் கடன் குறித்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். இதனால் நடராஜன் மன வேதனை அடைந்து வீட்டில் நேற்று தூக்கிட்டு இறந்தார். குலசேகரம் போலீசார் தனியார் வங்கி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
Next Story

