கோதையாறு: மீண்டும் காட்டு யானை பொதுமக்கள் அச்சம் 

கோதையாறு: மீண்டும் காட்டு யானை பொதுமக்கள் அச்சம் 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோதையாறு பகுதியில் யானைகளால் வீடுகள் சேதமடைந்து,  தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர்.  தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், ஒற்றை யானை ஒன்று கோதையாறு பகுதியில் நேற்று முன்தினம் முதல் ரப்பர் தோட்டங்களில் சுற்றி திரிகிறது.  இந்த யானை நடமாட்டம் பொதுமக்கள் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story