குமரியில் ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்

X
குமரியில் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தற்போது ரப்பர் மரங்களில் அழுகல் நோய் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் உள்ள மரங்களின் பட்டைகளில் சிறிதாக ஏற்படும் வெடிப்பு மூலம் ரப்பர் பால் வீணாக வடிந்து வெளியேறும். பின்னர் இந்த ஓட்டை அதிகமாகி, மரம் செல்லரித்தது போன்று உதிர்ந்தும், காய்ந்தும், பூஞ்சை, காளான் போன்றவை தொற்றியும் பால் வடிக்க முடியாத நிலை ஏற்படும். இறுதியில் மரம் பட்டுப்போகும். தற்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், இந்த அழுகல் நோய் அதிகரித்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் இந்த நோயில் இருந்து மரங்களை காப்பாற்ற, வேளாண் அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள், மருந்துகள் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

