பளு தூக்கும் போட்டியில் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்..

X
Rasipuram King 24x7 |29 Oct 2025 8:18 PM ISTபளு தூக்கும் போட்டியில் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்*
இராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி) மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான, ஆடவர் மற்றும் மகளிர் பளு தூக்கும் போட்டியில், முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் கே. வெங்கடாசலம் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான எட்டு வகை எடைப் பிரிவுகளில் 7- தங்கம் மற்றும் 1- வெள்ளி என மொத்தம் 8- பதக்கங்களுடன் ஆடவர் அணியும், மகளிருக்கான 8- வகை எடைப் பிரிவுகளில் 2- தங்கம் மற்றும் 5- வெள்ளி என மொத்தம்-7, பதக்கங்களுடன் மகளிர் அணியும் என ஒட்டு மொத்தமாக 15- பதக்கங்களுடன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியானது ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுச் சாதனை படைத்தது. இத்தகைய, பல்கலைக்கழக அளவிலான பளு தூக்கும் போட்டிகளில், இதுவரை ஆடவர் அணி தொடர்ந்து 17- ஆண்டுகளாகவும், மகளிர் அணி தொடர்ந்து 16- ஆண்டுகளாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சிறப்புக்குரியதாகும். முன்னதாக வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் கே. வெங்கடாசலம், கல்லூரியின் இயக்குனர் கல்வி முனைவர். இரா. செல்வகுமரன், முதல்வர் முனைவர் எஸ். பி. விஜயகுமார், வணிகக் கல்வி புல முதன்மையர் முனைவர் எம். என். பெரியசாமி மற்றும் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். மா.மருதை ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட அனைத்து மாணவ வீரர், வீராங்கனைகளுக்கும் கல்லூரியின் தாளாளர் திரு. கே. பி. இராமசுவாமி, செயலாளர் . இரா. முத்துவேல், முதல்வர் முனைவர் எஸ். பி. விஜயகுமார், துணை முதல்வர் முனைவர். ஆ. ஸ்டெல்லா பேபி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் தே. இரமேஷ், பயிற்சியாளர்கள் எஸ். கண்ணன், திருமதி ந. தவமணி திருமதி ஆர். பிரியங்கா ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
Next Story
