வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்
X
அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. வடக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக கணினி தொழில் நுட்ப முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் நீங்காமல் இருக்க முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி ஒவ்வொருவரும் தீவிரமாக செயல்பட வேண்டும். அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் பிரசார கூட்டங்கள், தெரு முனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் முதல் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும். இந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணிப்புப்படி வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். கடந்த தேர்தலில் குறைவாக வாக்குகள் பெற்ற, வாக்குச்சாவடிகளில், வருகிற தேர்தலில் அதிக வாக்குகள் பெற ஒவ்வொரு மக்களையும் சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story