பட்டியல் இன மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் பாஜக தலைவர் அட்வைஸ்*

பட்டியல் இன மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் பாஜக தலைவர் அட்வைஸ்*
X
பட்டியல் இன மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் பாஜக தலைவர் அட்வைஸ் கூறி பேட்டி அளித்துள்ளார்.
அரியலூர், அக்.30- பட்டியல் இன மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் பாஜக தலைவர் அட்வைஸ்* பட்டியல் இன மக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அரியலூர் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி பகுதியில் குட்டக்கரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:- ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் எல்லாத் தலைவர்களைப் போன்று அவர் ஒரு சாதாரணமா கடந்து விடக் கூடிய மனிதர் கிடையாது.தேசம் எனது உடல் என்றால் தேசியம், தெய்வீகம் என்பது என்னுடைய உயிர் என்று சொன்னவர். தேசமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று சொன்னவர். அப்படிப்பட்ட முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஏதோ வரலாற்றில் வருவது போல கிடையாது. முதன் முதலாக குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள். அதோட மட்டுமில்ல அவர் வந்து பால் குடித்து வளர்ந்தது ஒரு முஸ்லிம் பெண் கிட்ட, ஆயிஷா பீவிங்கிற ஒரு முஸ்லிம் பெண் தான் அவருக்கு பால் கொடுத்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது தாய் தமிழ் முஸ்லீம்கள் எல்லாம் பாகிஸ்தான் போக கூடாது இங்கே இருக்கணும்னு ஒரு அன்பு கட்டளையிட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள். அது மட்டும் கிடையாது ஹரிஜன மக்கள் எல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆலய பிரவேசம் பண்றதுக்கு முழுக்க முழுக்க ஆதரவு கொடுத்து அங்க ஒரு பிரச்சனை கூட வராம வைத்தியநாதன் அய்யருக்கு ரொம்ப சப்போர்ட்டிவாக தோள் கொடுத்தவர் நம்முடைய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள். அவர் வந்து அவருடைய வாழ்க்கையில ஜாதி எதிர்ப்பா ரொம்ப முன் வைத்தார். எல்லா மக்களும் அன்போடு இருக்க வேண்டும் என்று ஒரு குரல் கொடுத்தவர். நம்மளுடைய தேவர் ஐயா அவர்கள், நம்ம இப்ப இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் எல்லாருமே நம்ம தேவர் ஐயா அவர்களை பின்பற்றினால் ஒரு ஆரோக்கியமான அரசியல் பிரவேசமாக இருக்கும். ஏன்னா இது எதற்காக இதை சொல்றேன் அப்படின்னாக்க இப்ப ஆளுங்கட்சியா இருக்க கூடிய திமுக வந்து இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது, இந்து பண்டிகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கெல்லாம் அவங்க ஏதோ ஒரு சப்போர்ட்டா இருக்குற மாதிரி ஒரு கிரியேட் பண்றது, இது மாதிரியான அரசியல் எடுத்துட்டு இருக்காங்க, இது கண்டிப்பா தேவர் ஐயா இப்போ உயிரோடு இருந்தால் முதலில் எதிர்க்கக்கூடிய முதலில் குரல் கொடுக்கக்கூடிய மனிதராக நம்ம தேவர் ஐயா தான் இருப்பாங்க. அது மட்டும் கிடையாது இப்ப நம்ம ஒரு சமுதாயத்தின் பாதுகாவலனாக தன்னை சித்தரித்துக் கொண்டிருக்க கூடிய இந்த அரியலூர் மாவட்டத்தின் எம்.பியா இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அண்ணன் அவர்கள் கொஞ்சமாவது தேவர் ஐயா அவர்களுடைய வழியை பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏன்னா ஐயா அவர்கள் பாத்தீங்கன்னா எல்லாருமே அன்போடு இருக்கணும் பாசத்தோட இருக்கணும் ஹரிஜன மக்கள்லாம் ஆலய பிரவேசம் செய்யும் பொழுது எவ்வளவு சப்போர்ட்டா இருந்து எந்த பிரச்சினையும் வராமல் பாதுகாத்தார். ஆனால் இவர் தொல் திருமாவளவன் அண்ணன் அவர்கள் மேடையிலேயே விசிகவில் இருக்கணும்னா 10 வழக்கு வாங்கி இருக்கணும் அப்பதான் விசிகவினருக்கு தகுதி என்று பேசுவதும், அடங்க மறு, அத்து மீறு, திமிரி எழு, திருப்பி அடி என இந்த மாதிரி வீர வசனங்கள் எல்லாம் பேசி ஒரு இளைய சமுதாயத்தை திசை திருப்புவதுமாக இருந்து கொண்டிருக்கிறார். முதலில் அதை அவர் கண்டிப்பாக பண்ணக்கூடாது. இளைய தலைமுறை வந்து படிப்பு நல்ல படிப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து ஒரு சமுதாயம் மேல வளரணும், ஒரு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலை அடையணும்னாக்க படிப்பு முக்கியம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தலைவர் ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிக மிக தவறான ஒரு வழிகாட்டுதலை அவர் பின்பற்றி இருக்கிறார். அதோட மட்டும் இல்ல பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கக்கூடிய பகுதி பழங்குடி ரசிகப் பகுதிகள்லாம் நாங்க போய் பார்த்தோம்னா அங்க ரோடு கிடையாது, தண்ணி வசதி, தண்ணி பைப்பு கிடையாது, லைட் வசதி கிடையாது, அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளுமே இல்ல. இவர் எதன் அடிப்படையில் ஒரு சமுதாயத்தின் பாதுகாவலர் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார் என்று தெரியவில்லை. அதனால இப்ப இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் எல்லாருமே நம்மளுடைய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுடைய வாழ்க்கை வரலாறு திரும்பி பார்க்கணும் அவர் எடுத்த கொள்கைகளை பின்பற்றினாலே ஒரு ஆரோக்கியமான அரசியலை கொண்டு சென்று மக்களை பாதுகாக்க முடியும் தமிழகத்தை தலை நிமிரச் செய்ய முடியும் என்று சொல்லிக் கொள்கிறேன்....
Next Story