ராசிபுரத்தில் மினி டைட்டில் பார்க் கட்டுமான பணியை ஆரம்பிக்கக் கூடாது, தொடர்ந்தாள் தேசிய கூட்டணி கட்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் தங்கமணி பேட்டி

ராசிபுரத்தில் மினி டைட்டில் பார்க்  கட்டுமான பணியை ஆரம்பிக்கக் கூடாது, தொடர்ந்தாள் தேசிய கூட்டணி கட்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் தங்கமணி பேட்டி
X
ராசிபுரத்தில் மினி டைட்டில் பார்க் கட்டுமான பணியை ஆரம்பிக்கக் கூடாது, தொடர்ந்தாள் தேசிய கூட்டணி கட்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் தங்கமணி பேட்டி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்குள் ரூ.34.75 கோடி மதிப்பீட்டில் புதியதாக மினி டைட்டில் பார்க் அமைப்பதற்காக அரசு ஒப்பந்தம் கோரி அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் அடிக்கல் நாட்டு விழாவானது ஓரிரு வாரங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அரசு கலை கல்லூரி வளாகத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கல்லூரி வளாகத்திற்குள் மிடில் டைட்டில் பார்க் வருவது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். மினி டைட்டில் பார்க் ராசிபுரத்துக்கு தேவை ஆனால் வேறு இடத்தில் வைக்க வேண்டும் அரசு புறம்போக்கு நிலத்தில் வைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. அதை மீறி அங்கே கட்டுவதற்கு முயற்சி செய்தால் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அனுமதி பெற்றும்,தோழமைக் கட்சி தலைவர்களின் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். ராசிபுரத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் நிறையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் குறுக்குபுறப் பகுதியில் காவலர்களுக்கு விடு கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதனை இப்போது அவர்கள் பட்டா போடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இருக்கின்ற பேருந்து நிலையம் வசதியாக உள்ளது அவர்களோடு சுயநலத்திற்காக பேருந்து நிலையத்தை மாற்றி உள்ளனர். தொடர்ந்து இந்த அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. டைட்டில் பார்க் கட்டுமான பணியை ஆரம்பிக்கக் கூடாது தொடர்ந்து ஆரம்பித்தால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதனை மீறி தொடர்ந்தால் நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெறுவோம். தொடர்ந்து பேருந்து நிலையம், காவலர்களுக்காக ஒதுக்கிய இடம்,டைட்டில் பார்க் மக்களுக்கு இந்த அரசு விரோதமாக செயல்படுவதாக கண்டனமாக தெரிவிக்கிறேன். OPS மற்றும் KAS இருவரும் ஒன்றாக வாகனத்தில் சென்றதை நான் பார்க்கவில்லை, இப்பதான் நீங்க சொல்றீங்க என தெரிவித்தார். மேலும் குமாரபாளையம் பகுதியில் தனியார் கல்லூரியில் 180 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், தண்ணீரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. தனியார் கல்லூரியில் உயிரிழப்பு எதுவும் நடைபெறவில்லை தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் நான் கல்லூரியில் ஆய்வு செய்து விட்டேன். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அமைச்சர் தங்கமணி ராசிபுரத்தில் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கழக மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் வெ.சரோஜா, ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், அவைத் தலைவர் கந்தசாமி, ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன், இலக்கிய அணி முத்துசாமி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், வழக்கறிஞர் பிரிவு இரண்டாவது வார்டு செயலாளர் பூபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
Next Story